போத்தனூர் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி: 2 கோடி தங்கம், பணம் தப்பியது!

கோவை: கோவை போத்தனூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்கும் முயற்சியில் சிலர் இறங்கியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் தப்பின.


கோவை: கோவை போத்தனூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்கும் முயற்சியில் சிலர் இறங்கியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் தப்பின.

கோவை போத்தனூரில் சுந்தராபுரத்தை அடுத்த காந்தி நகர் பஸ் ஸ்டாப் அருகே, 'இண்டல் மணி, எனும் நகை கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவன கிளை செயல்படுகிறது, நேற்று காலை வேலைக்கு வந்த ஊழியர்கள், நிறுவனத்தின் ஷட்டர் சிறிது உயரமாக இருப்பதைக் கண்டனர். இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து, ஷட்டரைத் திறந்து உள்ளே சென்றனர். அங்கே நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கர்கள் உடைக்கப்படாமல் இருப்பது தெரிந்தது. சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, நேற்று முன்தினம் நள்ளிரவில் இரண்டுபேர் ஷட்டரை திறந்து உள்ளே வருவதும், ஒரு நிமிடம் கழித்து வெளியே சென்றதும் தெரிந்தது.

இதுகுறித்து மேலாளர் கதிர்வேலிடம் விசாரித்தபோது, லாக்கரில் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆறு கிலோ தங்க நகைகள் மற்றும் 1.5 லட்சம் ரூபாய் இருப்பதும் தெரிய வந்தது. போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...