கோவை மாவட்டத்தில் 100 சதவீத ரேஷன்கார்டு இலக்கு: 6,250 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம்!

கோவை: கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மக்களுக்கு 100 சதவீத ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 6 ஆயிரத்து 250 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மக்களுக்கு 100 சதவீத ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 6 ஆயிரத்து 250 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.

கோவையில் '100 சதவீத ரேஷன் அட்டை இலக்கு' என்ற அடிப்படையில் கடந்த, அக்டோபர் மாதம் 23-ம் தேதி முதல் தொடர்ந்து விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. கோவையில் 1,098 ரேஷன் கடைகளில் 10,57,000 அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் புதிதாக 6,250 பேருக்கு ரேஷன் கார்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விண்ணப்பிப்பவர்களில் உரிய சான்றிதழ் இல்லாதவர்களின் விண்ணப்பம் மட்டுமே நிராகரிக்கப்படுகின்றன. மற்ற அனைத்து விண்ணப்பங்களுக்கும் உடனுக்குடன் ஒப்புதல் வழங்கி அச்சிட அனுப்பப்படுகிறது. கோவையில், ஜனவரி 16-ந்தேதிக்கு முன்பு வரை விண்ணப்பித்த அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 6,250 பேருக்கு அட்டை வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...