பொள்ளாச்சி: தங்கையின் தோழியிடம் திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்த பொள்ளாச்சி வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி: தங்கையின் தோழியிடம் திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்த பொள்ளாச்சி வாலிபர்போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் தங்கையின் தோழியான 16 வயது சிறுமியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தகவலறிந்து சிறுமியைக் கண்டித்த அவரது பெற்றோர், கேரளாவில் உள்ள பெரியம்மா வீட்டுக்கு சிறுமியை அனுப்பி வைத்தனர்.
கேரளா சென்ற சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால், பாலக்காடு அரசு மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான தகவலின் அடிப்படையில், பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் பெற்றோரிடம் விசாரித்தனர். இதையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.