கோவை அருகே, துப்பாக்கி குண்டு பாய்ந்து விவசாயி பலியான வழக்கு: 5 பேருக்கு ஜாமீன் ரத்து!

கோவை: கோவை அருகே, துப்பாக்கி குண்டு பாய்ந்து விவசாயி பலியான வழக்கில் கைதான 5 பேருக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.


கோவை: கோவை அருகே, துப்பாக்கி குண்டு பாய்ந்து விவசாயி பலியான வழக்கில் கைதான 5 பேருக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

கோவை பேரூர் அருகேயுள்ள தீத்திபாளையம் மாதேஷ் கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 40). விவசாயியான இவர் கடந்த மாதம் 18-ம் தேதி தனது நண்பர்களுடன் அய்யாசாமி மலைப் பகுதியில் காட்டுப்பன்றி, முயல் வேட்டையாடச் சென்றார். அப்போது அவருடன் வந்த ஒருவர், நாட்டுத் துப்பாக்கியை லோடு செய்யும்போது, திடீரென அய்யாசாமிமீது தவறுதலாக குண்டு பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவர்கள் ஐந்து பேரும் அய்யாசாமியின் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த பேரூர் போலீசார் விசாரித்ததில் தீத்திபாளையத்தைச் சேர்ந்த அய்யாசாமியின் நண்பர்களான ராமன், பட்டீஸ்வரன், ஆர்.ரங்கநாதன், கே.ரங்கநாதன், சின்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று அவர்களது ஜாமீன் மனு கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி 5 வேட்டைக் காரர்களின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...