பொள்ளாச்சி: அ.தி.மு.க.வின் எடப்பாடி அரசு மக்களின் வரிப்பணத்தில் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறது என்று நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மணிமாறன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுகொரோனா பேரிடர் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விவாதிக்காமல் விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்ட மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. அதற்காக இன்றுவரை டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் இருக்கும் அ.தி.மு.க. அரசு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு அடிபணிந்து செயல்படுகிறது. தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் கூறும் கருத்துக்கள் பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் முதலமைச்சராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெற்றி பெறுவது உறுதி. தமிழகம் முழுவதும் சாதனை செய்து விட்டதாக கூறும் முதல்வர், மருத்துவ மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினைத்தான் சாதனை என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்து வருகிறார். இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது.
100 சதவீத இட ஒதுக்கீடு உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு 7.5 சதவீதம் பெற்றதை சாதனையாக பெருமை கொள்கிறது. கலைஞர், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மத்திய அரசால் நீட் தேர்வினை தமிழகத்தில் கொண்டு வர முடியாத நிலையில் எடப்பாடி அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்ததால் நீட் தேர்வு வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி செயலாளர் நாகராஜன், நகர செயலாளர் மருத்துவர் வரதராஜன், ஒன்றிய செயலாளர்கள் மருதவேல், தேவசேனாதிபதி, கன்னிமுத்து, ராசு, பணப்பட்டி வேலுமணி, மகேஸ்வரி நகர துணைச் செயலாளர் கார்த்திகேயன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.