பொள்ளாச்சி: பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்குமாறு ஃபிளக்ஸ் பேனர்கள் மூலம் தமிழக அரசை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி நகராட்சி சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. தற்போது சிறப்பு நிலை நகராட்சியாக உயர்ந்துள்ளது. இந்நகராட்சி ஆனைமலை, உடுமலை, வால்பாறை, கிணத்துகடவு உள்ளிட்ட நான்கு தாலுகாக்களின் மையமாக விளங்குகிறது. பொள்ளாச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 700-க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இங்கிருந்து பல நாடுகளுக்கு தென்னை நார் மற்றும் தென்னை சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதியாவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே குறைந்த மக்கள் தொகைகொண்ட மயிலாடுதுறை பகுதியை தமிழக அரசு மாவட்டமாக அறிவித்துள்ளது. ஆனால் அதைக் காட்டிலும் இரண்டு மடங்கு மக்கள் தொகை கொண்ட பொள்ளாச்சியை இன்னும் மாவட்டமாக அறிவிக்காதது வேதனை அளிக்கிறது. பொள்ளாச்சி மாவட்டமாக்கப்பட்டால், அதிகப்படியான தொழில் முன்னேற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளது, இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தயங்குவது இப்பகுதி மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி, வால்பாறை ஆனைமலை, கிணத்துகடவு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏதும் பிரச்சினைகள் இருந்தால் 50 முதல் 70 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க வேண்டிய நிலை உள்ளது. அதேபோல பொள்ளாச்சியை அடுத்த உடுமலை, மடத்துக்குளம் பகுதி மக்களும் நீண்டநேரம் பயணித்து திருப்பூர் மாவட்டத்துக்குச் சென்று மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கும் அவலம் உள்ளது. மேலும் பொள்ளாச்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டால் இதுபோன்ற இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாவதைத் தவிர்க்கலாம்.
பொள்ளாச்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டால் பல்வேறு நல்ல திட்டங்கள் தங்கள் பகுதி மக்களை வந்தடையும் என்பதே பொள்ளாச்சி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

எனவே பொள்ளாச்சியை மாவட்டமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொள்ளாச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அனைத்து வியாபாரிகள் சங்கங்கள், தொழில் வர்த்தக சபை மற்றும் பொதுமக்கள் இணைந்து ஃபிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.