கோவை: பழனி முருகன் கோயிலில் இரண்டாம் எண் மின் இழுவை ரயில் பராமரிப்பு பணிக்காக இன்று முதல் 40 நாட்கள் நிறுத்தப்படுகிறது,
கோவை: பழனி முருகன் கோயிலில் இரண்டாம் எண் மின் இழுவை ரயில் பராமரிப்பு பணிக்காக இன்று முதல் 40 நாட்கள் நிறுத்தப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்திலிருந்து மலைக் கோயிலுக்கு செல்ல மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் உள்ளது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், படியேறிச் சென்று முருகனை தரிசிக்க முடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கு இந்த மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் மூலம் பயணம் செய்துவருகின்றனர். மின் இழுவை ரயில் நிலையத்தில் இருந்து மொத்தம் மூன்று மின் இழுவை ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் இரண்டாம் எண் மின் இழுவை ரயில் பராமரிப்பு பணிக்காக இன்று (திங்கட்கிழமை) முதல் 40 நாட்கள் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் இழுவை ரயில் பராமரிப்புப் பணிகள் முடிந்ததும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு விரைவில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.