கோவை அருகே இருளர் சமூக பழங்குடியின மக்களுக்கு மின் வசதி: ரவுண்ட் டேபிள், பெண்கள் சர்க்கிள், கிரெடாய் அமைப்புகள் ஏற்பாடு!

கோவை: இருளர் சமூக பழங்குடியின மக்களுக்கு கோவை டவுன் ரவுண்ட் டேபிள், பெண்கள் சர்க்கிள், கிரெடாய் அமைப்புகள் சார்பில் மின்வசதி செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: இருளர் சமூக பழங்குடியின மக்களுக்கு கோவை டவுன் ரவுண்ட் டேபிள், பெண்கள் சர்க்கிள், கிரெடாய் அமைப்புகள் சார்பில் மின்வசதி செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை அணைக்கட்டி வனப்பகுதியை அடுத்த தூமனூர் மற்றும் செம்புக்கரை உள்ளிட்ட வசிக்கும் இருளர் சமூக பழங்குடியின மக்களுக்கு மின்வசதி செய்துகொடுக்க கோவை டவுன் ரவுண்ட் டேபிள் 31, கோவை நகர பெண்கள் சர்க்கிள் 16 மற்றும் கிரெடாய் அமைப்பு ஆகியவை முடிவு செய்தன. மின்வசதி செய்து கொடுப்பதன்மூலம் இப்பகுதியைச் சேர்ந்த 53 வீடுகளைச் சேர்ந்த இருளர் இன மக்கள் பயன்பெறுவர்.



இந்த திட்டத்துக்கான தொடக்கவிழாவில் வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் கோவை டவுன் ரவுண்ட் டேபிள் 31, கோவை நகர பெண்கள் சர்க்கிள் 16 மற்றும் கிரெடாய் அமைப்பு நிர்வாகிகள் பிரதீப் ராஜப்பா, தயானந்த் பழனிசாமி, சி.ஆர். சிந்துஜா தயானந்த், சி.ஆர்.ரோகிணி கிறிஸ்டோபர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

21-ம் நூற்றாண்டிலும் மின்சாரம் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நடத்துவது என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்று. இந்தச் சூழலில் தங்கள் வீடுகளில் மின்வசதி பெற்று வெளிச்சத்தில் வாழப்போகும் அந்த நாட்களை இருளில் இருக்கும் இருளர் சமூக பழங்குடியின மக்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...