கோவை: இந்துத்துவா சக்திகளைத் தடுக்க தி.மு.க.வுடன் ம.தி.மு.க. இணைந்து போராடுவது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம் என்று கோவையில் நிதியளிப்பு விழாவில் பேசிய வைகோ கூறினார்.

கோவை சித்தாபுதூர் சாலையில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் ம.தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியளிப்பு விழா நடைபெற்றது. ம.தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார் முன்னிலை வகித்தார்.

கோவை மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவிடம் முதல்கட்ட தேர்தல் நிதியாக மொத்தம் ரூ.80 லட்சத்து 88 ஆயிரம் தேர்தல் நிதி வழங்கினர். இதில் அதிகபட்சமாக கோவை மாநகர் மாவட்டம் சார்பாக ரூ.30 லட்சத்து 88 ஆயிரம் வழங்கப்பட்டது.
அப்போது நிர்வாகிகள் மத்தியில் வைகோ பேசியதாவது:-

இந்த கடுமையான காலகட்டத்தில் நிதி கேட்டு செல்லமுடியாத நிலையில் நிதி திரட்டியுள்ளோம். தேர்தலுக்காக பொதுமக்களிடம் நிதி வசூலிக்கும் ஒரே கட்சி ம.தி.மு.க.தான். மற்ற கட்சிகளுக்கு நிதி வசூலிக்க வேண்டிய தேவையில்லை. அவர்களிடம் நிதி குவிந்து கிடக்கிறது. மக்களிடம் தலைநிமிர்ந்து சென்று நிதி வசூலிக்கும் தகுதி நமக்கு இருக்கிறது. நிதி கேட்க வரும் ம.தி.மு.க.வினரை மக்களும் மதிக்கிறார்கள். அவர்கள் கொடுக்கிற தொகை சிறியதாக இருந்தாலும் அன்போடு வழங்குகிறார்கள்.

தமிழ்நாட்டின் நன்மைக்காக பாடுபடக்கூடிய கட்சியாக ம.தி.மு.க. உள்ளது. மீத்தேன், ஸ்டெர்லைட் போராட்டம் உள்ளிட்டவை ம.தி.மு.க.வால் நடத்தப்பட்டது. இந்துத்துவா சக்திகளைத் தடுக்க தி.மு.க.வுடன் ம.தி.மு.க. இணைந்து போராடுவது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம். இதன் காரணமாக தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ளோம். தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் எதையும் எதிர்பார்த்து கட்சியில் இருக்கவில்லை. எம்.எல்.ஏ.வாக, கவுன்சிலர்களாக ஆக வேண்டும் என்றும் நினைக்கவில்லை. ஆனால், கொள்கை உறுதியோடு இருக்கிறார்கள், இன்னும் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், பகுதி கழக செயலாளர் வெள்ளியங்கிரி, பொதுக்குழு உறுப்பினர் பயனீர் தியாகு, ஆடிட்டர் அர்ஜுன் ராஜ், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.எம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.