கோவை சிங்காநல்லூர் குளத்தில் இரண்டு இறகு கொண்ட புதிய வகை பூச்சி கண்டுபிடிப்பு!

கோவை: சிங்காநல்லூர் குளத்தில் இரண்டு இறகு கொண்ட புதிய வகை பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கோவை: சிங்காநல்லூர் குளத்தில் இரண்டு இறகு கொண்ட புதிய வகை பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள குளங்களில் சிங்காநல்லூர் குளம் மிக முக்கியமான பல்லுயிர் சூழல் மற்றும் இயற்கை வளம் நிறைந்த குளமாக, சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தக் குளத்தில் கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்ததில், 1,000-த்துக்கும் மேற்பட்ட பல்லுயிர்கள் இருப்பதை, ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தி உள்ளனர்.

இப்போது உலகில் வேறு எங்கும் காணாத, புதிய வகை பூச்சி ஒன்று இந்தக் குளத்தின் கரையில் வாழ்வதாக, புனேவில் உள்ள இந்திய வன விலங்குகள் ஆய்வு நிறுவனம் மற்றும் 'கியூப்' அமைப்பை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பூச்சிக்கு, 'அஸ்பாண்டிலியா சிங்காநல்லுாரென்சிஸ்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உலக நீர் நிலைகள் தினத்தை முன்னிட்டு, சிங்காநல்லூர் குளத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் மற்றும் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன இயக்குனர் குன்னி கண்ணன் முன்னிலையில் புதிய பூச்சி குறித்த தகவல் வெளியிடப்பட்டது.

புனே இந்திய விலங்கியல் மையத்தின் ஆராய்ச்சியாளர் வசந்தகுமார் மற்றும் 'கியூப்' அமைப்பின் ஆராய்ச்சியாளர் வின்னி கூறியதாவது:-

இந்தியாவில், 396 வகையான பூச்சி இனங்கள் உள்ளன. இவற்றில் எதிலும் இல்லாத புதிய வகை பூச்சி வகைதான், சிங்காநல்லுார் குளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பூச்சி இனங்களில் நான்கு இறகுகள் மற்றும் இரண்டு இறகுகள் உள்ள பூச்சிகள் உள்ளன. இது இரண்டு இறகு கொண்ட பூச்சியாகும். இது புதிய பூச்சி இனமா என்பதைக் கண்டறிய, மரபியல் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் டி.என்.ஏ. வேறு எந்த பூச்சியுடனும் பொருந்திப் போகவில்லை. அதனால் இது எங்கும் இல்லாத, புதிய வகைபூச்சி என ஆராய்ச்சியில் உறுதியானது. நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பிறகு இதை உறுதிப்படுத்தி இருக்கிறோம். இதுகுறித்த ஆராய்ச்சிக் கட்டுரை சர்வதேச ஆராய்ச்சி இதழில் வெளி வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...