கோவை: ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாங்கல்யம் எடுத்துக்கொடுத்து 123 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தனர்.

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் ஏழை பெண்களுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இன்று 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இதற்காக கோவை சிறுவாணி சாலையில் உள்ள பேரூர் செட்டிபாளையத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வளர்பிறை முகூர்த்தத்தில் அந்தந்த மத முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாங்கல்யம் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த மணமக்களின் பெற்றோர் கண்ணீர் மல்க முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து திருமண ஜோடிகளுக்கு 73 வகையான சீர்வரிசைப் பொருட்களையும் அவர்கள் வழங்கினர். அத்துடன் திருமண ஜோடிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
திருமண ஜோடிகளுக்கு கட்டில், மெத்தை, தலையணை, பீரோ, சூட்கேஸ், கேஸ் ஸ்டவ், குத்துவிளக்கு, சில்வர் குடம், குக்கர் உள்ளிட்ட சமையலறைப் பொருட்கள், பூஜைப் பொருட்கள் உள்ளிட்ட 73 வகையான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

திருமணம் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் 73 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இலவச திருமணத்துக்காக முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் 73 ஜோடிகளுக்குப் பதிலாக 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது' என்றார்.