தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க வேண்டும் கொமதேக ஈஸ்வரன் வலியுறுத்தல்!

கோவை: தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை மணியகாரன் பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கொங்கு குடும்ப விழா நடைபெற்றது.



இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மற்றும் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்புரையாற்றிய அக்கட்சியின் கொண்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மாநில அரசு கவனிக்கிறதா என கேள்வி எழுப்பிய அவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதாக குற்றம்சாட்டினார். தமிழக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசு வரியை குறைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பின்னர், தேவர் சமூகம் குறித்து சட்டத்துறை அமைச்சர் பேசியது குறித்த கேள்விக்கு, எந்த சமூகத்தையும் கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த அவர், அத்தகைய பேச்சு கண்டிக்கத்தக்கது என்றார்.

மேலும், சட்டமன்ற தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவீர்கள் என்ற கேள்விக்கு 50 தொகுதிகளில் முடிவுகளை மாற்றும் சக்தி கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு உள்ளது அனைவருக்கும் தெரியும் எனவும், அதனால் எங்களது வலிமைக்கு ஏற்றவாறு தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு பயணிக்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சிறு குறு தொழில்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எந்த தீர்வும் தற்போதைய மத்திய பட்ஜெட்டில் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டிய ஈஸ்வரன், வேலையில்லா திண்டாட்டத்தை எந்தவித தீர்வும் இல்லை என தெரிவித்தார். குல வெள்ளாளர் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் உள்ளது எனவும் தேர்தலுக்காக மத்திய மாநில அரசுகள் இதை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் 55 சதவீத மக்கள் உள்ள நிலையில் 26.5 சதவீத ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது எனவும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு குறைந்தபட்சம் 40 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...