என் மனைவிமீது ஆசைப்பட்டதால் கடத்தி கொன்றேன்: கோவை கஞ்சா வியாபாரி கொலையில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்!

கோவை: கோவை கஞ்சா வியாபாரி கொலையில் கைதானவர் அளித்த வாக்குமூலத்தில், தனது மனைவிமீது ஆசைப்பட்டதால் கடத்தி கொன்றதாகக் கூறியுள்ளார்.


கோவை: கோவை கஞ்சா வியாபாரி கொலையில் கைதானவர் அளித்த வாக்குமூலத்தில், தனது மனைவிமீது ஆசைப்பட்டதால் கடத்தி கொன்றதாகக் கூறியுள்ளார்.

கோவை ரத்தினபுரி அருகே உள்ள நாராயணசாமி கவுண்டர் வீதியைச் சேர்ந்த ரவிமகன் மணிகண்டன் (வயது 23). எலக்ட்ரீசியனான இவர் கஞ்சா வியாபாரம் செய்துவந்தார். கடந்த மாதம் 25-ஆம் தேதி மணிகண்டன் வீட்டில் இருந்தபோது போலீஸ் என்று அறிமுகம் செய்த 3 பேர் அவரிடம் விசாரிக்க வேண்டுமென்று கூறி அழைத்துச் சென்றனர். இதையடுத்து மணிகண்டனை மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் பகுதிக்கு காரில் அழைத்துச் சென்று உருட்டுக்கட்டை மற்றும் கம்பியால் தாக்கினர். இதில் மயங்கிய அவரை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணிகண்டனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணிகண்டன் 24 -ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கஞ்சா வியாபாரி மணிகண்டனை அடித்து கொலை செய்த கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த சுரேஷ்குமார், ராஜகோபால், வடிவேல் மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சுரேஷ்குமாரிடம் போலீசார் விசாரித்தபோது அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- நான் கூலி வேலை செய்து வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கும் ரத்தினபுரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. கடந்த மாதம் 23-ஆம் தேதி நான் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றபோது மணிகண்டன் என்னை வழிமறித்து, `உன் மனைவி என் காதலி. அவளை விட்டுவிடு' என்றான். மேலும், அவளை விடவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று அவன் மிரட்டியதால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

இதனால் பயந்துபோன நான் அவன் என்னை கொலை செய்வதற்கு முன்பு அவனை கொல்லத் திட்டமிட்டேன். இதுபற்றி எனது நண்பர்கள் ராஜகோபால், வடிவேல், சுஜித் ஆகியோரிடம் கூறினேன். இதையடுத்து கடந்த 25-ஆம் தேதி எனது நண்பர்கள் தங்களை போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டு மணிகண்டனை அழைத்து வந்தனர். பின்னர் காரில் வைத்து நாங்கள் அனைவரும் காருக்குள்ளேயே அவனைத் தாக்கினோம். மணிகண்டன் மயங்கியதால் காரிலேயே ஊர் ஊராக சுற்றிய நாங்கள் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் அம்மன் கோயில் அருகே போட்டுவிட்டு தப்பிச் சென்றோம். இதையடுத்து சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்ததால் தலைமறைவான எங்களை போலீசார் கைது செய்தனர்' என்றார்.

இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சுஜித் என்பவரை தேடி வருகிறார்கள்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...