பொள்ளாச்சி அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தச்சுத் தொழிலாளர் 2 பேர் பலி!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தச்சுத் தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தச்சுத் தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள்.

பொள்ளாச்சியை அடுத்த கொள்ளுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 65). இவரது நண்பர் கோட்டூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 45). இருவரும் தச்சு தொழிலாளர்கள்.

இவர்கள் இருவரும் இன்று வேலைக்குச் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். பொள்ளாச்சி - பல்லடம் சாலையில் விஜயபுரம் அருகே வந்த போது, அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டு சாலையை கடந்தனர்.

அப்போது திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார், சாலையை கடந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.



இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட இருவரும் தலையில் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 வாகனத்தில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனை செல்லும் வழியில் அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். விபத்தில் கார் அருகில் உள்ள மரத்தில் மோதி நின்றது. இதில் காரை ஓட்டி வந்த திருப்பூரைச் சேர்ந்த தாமோதரன் என்பவரும் காயமடைந்தார். கார் ஓட்டுநர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...