கோவை: கோவை மாநகராட்சி பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் வேலுமணி வழங்கினார்.

கோவை மாநகராட்சியில் பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிகளுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன், கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.மதுராந்தகி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.