கோவை உக்கடம்‌ பகுதியில்‌ புதிய சில்லரை மீன்‌ மார்க்கெட்‌ கட்டிடம்‌ கட்டும்‌ பணிகளுக்கு அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அடிக்கல்‌ நாட்டினார்!

கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில்‌ உக்கடம்‌ பகுதியில்‌ புதிய சில்லரை மீன்‌ மார்க்கெட்‌ கட்டிடம்‌ கட்டும்‌ பணிகளுக்கு அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ அடிக்கல்‌ நாட்டினார்.


கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில்‌ உக்கடம்‌ பகுதியில்‌ புதிய சில்லரை மீன்‌ மார்க்கெட்‌ கட்டிடம்‌ கட்டும்‌ பணிகளுக்கு அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ அடிக்கல்‌ நாட்டினார்.



கோவையில் புள்ளுக்காடு ஹவுசிங்யூனிட்‌ பகுதியில்‌ கோவை ஸ்மார்ட்‌ சிட்டி விரிவாக்கத்திற்காக இடமாற்றம்‌ செய்யப்பட்டு புதியதாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில்‌ புதிய பள்ளிவாசல்‌ கட்டிடத்தை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ திறந்து வைத்தார்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட உக்கடம்‌ புல்லுக்காடு, ஹவுசிங்யூனிட்‌ பகுதியில்‌ மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ இன்று (12.02.2021) புதிய சில்லரை மீன்‌

மார்க்கெட்‌ கட்டிடம்‌ கட்டும்‌ பணிகளுக்காக அடிக்கல்‌ நாட்டிய பின்னர், புள்ளுக்காடு ஹவுசிங்யூனிட்‌ பகுதியில்‌ கோவை ஸ்மார்ட்‌ சிட்டி விரிவாக்கத்திற்காக இடமாற்றம்‌ செய்யப்பட்டு புதியதாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில்‌ புதியதாக கட்டப்பட்ட பள்ளிவாசல்‌ கட்டிடத்தையும்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில்‌ தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன்‌ கே.அர்ச்சுணன்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.மதுராந்தகி, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ தி.ரா.ரவி, மண்டல சுகாதார அலுவலர்‌ லோகநாதன்‌, கோவை மாவட்ட மொத்த மீன்‌ வியாபாரிகள்‌ சங்கத்தினர்‌, வியாபார பெருமக்கள்‌, இஸ்லாமிய ஜமாத்‌ பொதுமக்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...