திருப்பூர்: அ.தி.மு.க. விளம்பரம் கொடுப்பதில் தி.மு.க.வுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அரசின் பணத்தில் அல்லாமல் அ.தி.மு.க.வின் பணத்தில் கொடுக்க வேண்டும் என்று கனிமொழி கேட்டுக்கொண்டார்.
திருப்பூர்: அ.தி.மு.க. விளம்பரம் கொடுப்பதில் தி.மு.க.வுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அரசின் பணத்தில் அல்லாமல் அ.தி.மு.க.வின் பணத்தில் கொடுக்க வேண்டும் என்றுகனிமொழி கேட்டுக்கொண்டார்.
`விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' எனும் தலைப்பில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அமர்ஜோதி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போதுஅவர் கூறியதாவது:-
அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் திருப்பூரில் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக இல்லை. வேலை வாய்ப்புகள் அதிக அளவில் தரக்கூடிய பின்னலாடை தொழில் நிறைந்த திருப்பூரில் கொரோனாமற்றும் ஜி.எஸ்.டி.யால் பாதிக்கப்பட்டிருந்தபோது மாநில அரசும், மத்திய அரசும் உதவிகரமாக இல்லை.
அ.தி.மு.க. அரசின் குடிமராமத்து சாதனை என்பது ஏட்டளவில் மட்டுமே நடைபெற்றது. அ.தி.மு.க. விளம்பரம் கொடுப்பது தி.மு.க.வுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அரசின் பணத்தில் அல்லாமல் அ.தி.மு.க.வின் பணத்தில் கொடுக்க வேண்டும். தி.மு.க. இதுவரை யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை. கொள்கை ரீதியாக முரண்பாடு ஏற்பட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறும் தைரியமும் தி.மு.க.வுக்கு இருக்கிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அறிவித்த முதல்வர் உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டது ஏன் என்பதை விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.