திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரம் - அதிமுக 100 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்குமென சூளுரை!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 2 நாட்கள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 2 நாட்கள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அதன் ஒரு பகுதியாக இன்று பல்லடத்தில் பேசிய அவர், திமுக குடும்பங்களில் உள்ள அனைவரும் ஆட்சியை பிடிக்க கிளம்பிவிட்டனர். திமுகவினர் கோர்ப்பசியில் உள்ளனர் என்றார். உதயநிதி ஒரு வாரிசு என்பதை தவிர வேறு எந்த முத்திரையும் கிடையாது. ஜனநாயக முறைப்படி நடக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்று கூறியவர், மக்களோடு மக்களாக அதிமுகவினர் பழகி வருகின்றனர். ஆனால், ஸ்டாலின் இதுவரை எந்த கஷ்டத்தையும் அனுபவித்ததில்லை என்று குற்றம்சாட்டினார்.

மேலும், ஸ்டாலினுக்கு அவர் அப்பா பின்புலமாக இருந்தார். ஆனால், எங்களுக்கு மக்கள் தான் பின்புலம் என்றவர், சட்டமன்றத்திற்கும் ஸ்டாலின் வருவதில்லை, அரசு என்ன திட்டம் போடுகிறது என்பது கூட ஸ்டாலினுக்கு தெரியாது என்றதுடன், ஸ்டாலின் மேற்கொள்வது பொய் பிரச்சாரம் என தெரியப்படுத்தவே, அதிமுக அரசு பத்திரிகை வாயிலாக தெரியப்படுத்தி வருகிறது. திமுக அரசாங்கம் தான் ஊழல் செய்ததற்காக ஆட்சி கலைக்கப்பட்டது என்றார்.



பின்னர், நேருக்கு நேர் விவாதம் குறித்து பேசிய போது, மேடை போட்டு, மைக் பிடித்து நேருக்கு நேர் வந்து குற்றச்சாட்டு வைத்தால், நானும் பதில் சொல்ல தயாராக உள்ளேன். ஆனால், அப்படி வராமல் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று பொய் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்றார். முதல்வர் பேசிய போது ஆம்புலன்ஸ் வந்தது. அதற்கு வழிவிட்டு நிற்குமாறு தொண்டர்களுக்கு கூறி, ஆம்புலன்ஸ் சென்ற பிறகு மீண்டும் பேச ஆரம்பித்தார்.

அதேபோல, வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டு வருகிறது. 5 வருடத்திற்கு கணக்கு பார்த்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் 40 ஆயிரம் ரூபாய் அளவிற்கான மின்சாரம் இலவசமாக கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் தான் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வீடு இல்லாத தாழ்த்தப்பட்ட மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்க உள்ளோம் என்றார்.

மேலும், ஜெயலலிதா சட்டமன்றத்தில் கூறியது போன்று 100 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக இருக்கும். இவ்வளவு மக்கள் ஆதரவு கொடுக்கின்றனர். அடுத்த ஆட்சியும் அதிமுக தான். அப்படி சூழலில் இவர் எப்படி கோரிக்கை மனுக்களை நிறைவேற்றுவார் என்று கேள்வியும் எழுப்பினார்.

அதனை தொடர்ந்து, தனியார் மண்டபத்தில் மகளிர் அமைப்பினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பேசிய போது, மகளிரின் திருமணங்கள் பொருளாதார ரீதியாக தடைபடக்கூடாது என்பதற்காகவே , திருமண உதவி திட்டம் கொண்டு வரப்பட்டது எனவும் சுய உதவிக்குழுக்களுக்காக 81 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி இணைப்பு கடன் பெற்றுத்தரப்பட்டது. கொரோனா காலங்களிலும் 12 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற வழிவகை செய்யப்பட்டது என்றும் கூறினார். இக்கூட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாளை மகளிர் முன்னேற்ற தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடப்பட்டது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...