தேவர் சமுதாயத்தை இழிவாக பேசிவரும் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது நடவடிக்கை: கோவை காவல் ஆணையரிடம் முக்குலத்தோர் வழக்கறிஞர் சங்கம் மனு!

கோவை: தேவர் சமுதாயத்தையும் டி.டி.வி. தினகரன் பற்றியும் தரக்குறைவாக பேசி வரும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணிடம் முக்குலத்தோர் வழக்கறிஞர் பிரிவினர் இன்று மனு கொடுத்தனர்.


கோவை: தேவர் சமுதாயத்தையும் டி.டி.வி. தினகரன் பற்றியும் தரக்குறைவாக பேசி வரும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணிடம் முக்குலத்தோர் வழக்கறிஞர் பிரிவினர் இன்று மனு கொடுத்தனர்.



கோவை கோபாலபுரம் பாலாஜி காம்ப்ளக்ஸ் பகுதியில் வசிப்பவர் வழக்கறிஞர் கார்த்திக். முக்குலத்தோர் சமுதாய வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த இவர் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 11-ஆம் தேதி சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டி.டி.வி.தினகரன் பார் வைத்து ஊத்திக் கொடுக்கும் தொழில் செய்கிறார் என்றூ கூறியதுடன் அவருடைய குலத் தொழிலையும் தனிநபர் தாக்குதல் தொடுத்துள்ளார். சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட தேவர் சமுதாயத்தைப் பற்றியும் தரக்குறைவாக பேசியுள்ளார். தொடர்ந்து பல்வேறு செய்தியாளர்கள் சந்திப்பில் இதுபோன்ற கருத்துக்களை பேசிவரும் சட்ட அமைச்சர் மீது காவல்துறை ஆணையர் முறைப்படி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...