கோவை: கோவை அரசுப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டி அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு படிக்கக்கூடிய மாணவ-மாணவிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுகாதாரத் துறையினர் சிறப்பான ஏற்பாடுகள்.
தமிழக அரசு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளை தொடங்க உத்தரவிட்டது. இதையடுத்து கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளி திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடந்து வருகிறது. சுழற்சி முறையில் தினமும் 600 மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலை தினமும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு கிருமி நாசினி மூலம் கைகள் சுத்தம் செய்யப்படுகிறது. அதன்பிறகே வகுப்புகளுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தப் பணியில் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 38 வயது மதிக்கத்தக்க உடற்கல்வி ஆசிரியையின் தாய்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் ஆசிரியைக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. பரிசோதனையில் ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அங்கு விரைந்த சுகாதாரத்துறையினர் ஆசிரியை பணியாற்றிவந்த கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தனர். கோவை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பு ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஆசிரியைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவம் பள்ளி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியையின் தாய்க்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், அவர் மூலம் ஆசிரியைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் குடியிருக்கும் பகுதி மற்றும் அவர் பணியாற்றும் பள்ளியில் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பள்ளி மாணவ- மாணவிகள், ஊழியர்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருந்தால் தகவல் அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளியை மாவட்ட மருத்துவ அலுவலர் உள்பட இரண்டு டாக்டர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் கண்காணித்து வருகின்றனர்.
ஆசிரியை மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இல்லாததால் மாணவர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆசிரியையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.