கோவையில் உள்ள பயிற்சி மைதானத்தில், 32 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த துணை காவல் ஆய்வாளர்கள், நெகிழ்ச்சி..!

கோவை: கோவையில் கடந்த 1988-ம் ஆண்டு நடைபெற்ற போலீஸ் தேர்வில் காவலர்களாக தேர்வாகி, தற்போது துணை ஆய்வாளர்கலாக பணியாற்றி வருபவர்கள், 32 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நண்பர்களாக அதே பயிற்சி மைதானத்தில் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் கோவையில் நடைபெற்றது.



கோவை: கோவையில் கடந்த 1988-ம் ஆண்டு நடைபெற்ற போலீஸ் தேர்வில் காவலர்களாக தேர்வாகி, தற்போது துணை ஆய்வாளர்கலாக பணியாற்றி வருபவர்கள், 32 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நண்பர்களாக அதே பயிற்சி மைதானத்தில் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் கோவையில் நடைபெற்றது.

அதே பயிற்சி மைதானத்தில் 32 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு..!

கடந்த 1988 ஆம் ஆண்டு, கோவை புதூரில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில், தேர்ச்சி பெற்று பல்வேறு மாவட்டங்களுக்கு பணிக்குச் சென்று, தற்சமயம் துணை ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வருவோர், 32 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பயிற்சி பெற்ற மைதானத்தில் சந்தித்து கண்ணீர் மல்க அன்பை வெளிப்படுத்திய காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வாட்ஸ்ப் குரூப் மூலம் சக நண்பர்களுக்கு தகவல்..!

1988 ஆம் ஆண்டு கோவைபுதூரில் பயிற்சி பெற்ற காவலர்கள், கடந்த 7 ஆம் தேதி மீண்டும் அதே பயிற்சி மைதானத்தில் சந்திக்க முடிவு செய்தனர். பின், அதற்கென ஒரு வாட்ஸ்அப் குரூப்பை தொடங்கி, அதன் மூலமாக பல்வேறு மாவட்டத்தில், துணை ஆய்வாளர்காலாக பணிபுரிந்து வந்த சக நண்பர்களை தொடர்பு கொண்டனர். பின்னர், அனைவரும் கடந்த 7 ஆம் தேதி அவர்கள் பயிற்சி பெற்ற அதே மைதானத்தில் சந்திக்க முடிவு செய்தனர்.

நெகிழ்ச்சியான சந்திப்பு..!



திட்டப்படி அன்று சந்தித்த நண்பர்கள், 32 ஆண்டுகளுக்கு பின்னர் ஒருவரை ஒருவர் பார்த்ததில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தனர். பயிற்சி காலம் முதல் இன்று வரை அவர்கள் கடந்து வந்த பாதை குறித்து எண்ணற்ற நினைவுகளை பரிமாறி கொண்டனர். பின்னர், அனைவரும் ஒன்றுகூடி அறுசுவை உணவு அருந்தி கலந்துரையாடினர்.

ஆசான்களுக்கு மரியாதை..!

ஆரவாரமாக பேசி மகிழ்ந்தது மட்டும் அன்றி, இவர்களுக்கு பயிற்சி அளித்த ஓய்வு பெற்ற ஆசான்களையும் அழைத்து கௌரவித்தனர். இதை தொடர்ந்து, இவர்களை சிறப்பாக உணவளித்து உபசரித்த தனியார் கிளப், நினைவு பரிசு தயாரித்து கொடுத்த நிறுவனம் மற்றும் புகைப்படம் எடுத்த ஸ்டுடியோ என அவர்களையும் அழைத்து நன்றி தெரிவித்தனர்.

பிரிந்த நண்பருக்கு அஞ்சலி, உதவித்தொகை

பின்னர், 1988 ஆம் ஆண்டு அவர்களுடன் பயிற்சி பெற்ற பால் அலெக்சாண்டர் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் இயற்கை எய்தியதை நினைவுகூரும் வகையில், அவரது குடும்பத்திற்கு, கோவை கில்லிஸ் (Gillies) நண்பர்கள் சார்பாக ரூ. 75,000 பணம், மறைந்த காவலரின் குடும்பத்தாருக்கு உதவி தொகையாக வழங்கினர்.

பிறகு, நண்பர்கள் அனைவரும் மனநிறைவோடு பிரியாவிடையுடன் புறப்பட்டுச் சென்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...