கோவை: விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகி ஜெயசீலன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
கோவை: விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகி ஜெயசீலன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுவிஜய் மக்கள் இயக்கத்தினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் விஜய் ரசிகர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நீக்கப்பட்ட ஜெயசீலன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் மீது அடிப்படையாக ஆதாரங்கள் இல்லாமல் அவதூறாக பேசி வருகிறார்.
எனவே, அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபிரதீப் குமார், `ஜெயசீலன் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தனியார் தொலைக்காட்சியில் அவதூறாக பேசி வருகிறார். மாவட்ட நிர்வாகிகள் குறித்தும் பேசுகிறார். எனவே, அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.