பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி தொலைபேசி எண்கள் உருவாக்கி மோசடி: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை!

கோவை: மிகவும் பிரபலமான நிறுவனங்களின் தொலைபேசி எண்களை போலியாக தயார் செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: மிகவும் பிரபலமான நிறுவனங்களின் தொலைபேசி எண்களை போலியாக தயார் செய்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரபல ஆன்லைன் நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மைய தொலைபேசி எண்களை போலியாக உருவாக்கி, பணத்தை திருடுவது அதிகரித்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:- பெரும்பாலும் குறிப்பிட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையங்களின், தொடர்பு எண்கள் தேடுதளங்கள் மூலம் தேடப்படுகிறது. பொருளை வாங்க ஆர்டர் கொடுத்து அதற்கான பணத்தை செலுத்திய பின் பல்வேறு காரணங்களால் பொருள் வாடிக்கையாளருக்கு வழங்கப்படாதபோது அவர் புகார் தெரிவிக்க அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்கிறார்.

மோசடிப் பேர்வழிகள் இத்தகைய வாடிக்கையாளர்களை கணக்கில் கொண்டு தேடுதளங்களில், பிரபல நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய தொடர்பு எண்களை போலியாக பதிவு செய்கின்றனர். இதை உண்மையென நம்பி அழைக்கும் வாடிக்கையாளர்களின் பணம் பறிக்கப்படுகிறது. சமீபகாலமாக, இத்தகைய புகார்கள் அதிகரித்துள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...