கோவை: கோவை தனியார் மருத்துவக்கல்லூரி மேலாளரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் போலி ஆவணம் தயாரித்து கல்லூரியை விற்க முயன்றவர்கள் என்பது தெரியவந்தது.

கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியை விற்பதாகக் கூறி சிலர், மோசடியில் ஈடுபடுவதாக மேலாளர் சிவகுமார் செட்டிபாளையம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில், நேற்று மதியம் அங்கு வந்த மோசடி நபர்கள் 2 பேர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக சிவகுமாரிடம் கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அந்த ஆசாமிகளுக்கும், மேலாளர் சிவக்குமாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த மோசடி நபர்கள் சிவக்குமாரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த செட்டிபாளையம் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர்கள் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இரண்டுபேரும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யூரைச் சேர்ந்த சங்கர் மற்றும் துடியலூர் அசோகபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பதும் தெரிய வந்தது.
இவர்கள் இருவரும் கல்லூரி இணையதளத்தில் உள்ள தகவல்களைச் சேகரித்து, அதனடிப்படையில், மோசடி முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.