கொரோனாவிலிருந்து விடுபட சத சண்டி மஹா யாகம்: பொள்ளாச்சி ஜோதிடருடன் இணைந்து பொதுமக்கள் நடத்தினர்!

பொள்ளாச்சி: கொரோனாவிலிருந்து விடுபடவும், உலக நன்மை வேண்டியும் பொள்ளாச்சி ஜோதிடருடன் இணைந்து பொதுமக்கள் சத சண்டி மஹா யாகம் நடத்தினர்.


பொள்ளாச்சி: கொரோனாவிலிருந்து விடுபடவும், உலக நன்மை வேண்டியும் பொள்ளாச்சி ஜோதிடருடன் இணைந்து பொதுமக்கள் சத சண்டி மஹா யாகம் நடத்தினர்.

பொள்ளாச்சியில் உள்ள பிரபல ஜோதிடர் ஜோதி கிருஷ்ணா மற்றும் திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உலக நன்மை வேண்டியும், கொரோனோ போன்ற பெருந்தொற்றிலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டியும் சத சண்டி மஹாயாகம் நடத்தினர்.



கடந்த 9-ஆம் தேதி தொடங்கிய யாகம் தை அமாவாசை வரை 3 நாட்கள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்கலந்துகொண்டு உலக நன்மை வேண்டி பரிகார பூஜைகள் செய்தனர். பண்டைய காலங்களில் மன்னர்கள், மிகப்பெரிய செல்வந்தர்களுக்காக மட்டுமே செய்து கொண்டிருந்த இந்த யாகம் தற்போது மக்கள் நலனுக்காக நடத்தப்படுகிறது.

சுமார் 603 வருடங்களுக்குப் பிறகு சூரியன், சந்திரன், குரு, சனி சுக்கிரன், புதன் ஆகிய 6 கிரகங்கள் மகர ராசியில் இணைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தனுசு ராசியில் இருந்து மிதுன ராசியைப் பார்த்த பிறகுதான் கொரோனா என்ற பெரும் தொற்று ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் மன அழுத்தத்தில் உள்ளார்கள்.

மகர ராசியில் ஏழு கிரகங்களின் இணைவு நடப்பதால் உலக மக்களின் இன்னல்கள் நீங்கும். கொரோனா போன்ற பெருந்தொற்றில் இருந்து விடுபடுவார்கள். அதற்காக இந்த சிறப்பு யாகம் நடத்தப்படுவதாகவும், கடந்த ஆண்டு கிரகங்கள் நெருப்பிலிருந்து காற்றைப் பார்த்ததால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது மண்ணிலிருந்து நீரை பார்ப்பதால் பொங்கி வரும் பிரச்சினைகள் தானே அழிந்துவிடும் என்று ஜோதிடர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...