பொள்ளாச்சி அருகே, டிராக்டரில் ஏற்றிவந்த சோளத்தட்டையில் மின்கம்பி உரசி தீ விபத்து!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, டிராக்டரில் ஏற்றிவந்த சோளத்தட்டையில் மின்கம்பி உரசி தீ விபத்து ஏற்பட்டது. டிராக்டரை ஓட்டிவந்த விவசாயியின் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, டிராக்டரில் ஏற்றிவந்த சோளத்தட்டையில் மின்கம்பி உரசி தீ விபத்து ஏற்பட்டது. டிராக்டரை ஓட்டிவந்த விவசாயியின் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது.

பொள்ளாச்சியை அடுத்த மோதிராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார். இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். பொள்ளாச்சி பகுதியிலிருந்து சோளத்தட்டையை டிராக்டரில்ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி - மோதிராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பிமீது உரசியதில் சோளத்தட்டை தீப்பிடித்து எரிந்தது. சுதாரித்துக்கொண்ட மதன்குமார் உடனடியாக டிராக்டரில் இருந்த சோளத் தட்டைகளை ரோட்டிலேயே கொட்டினார்.



தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் டிராக்டரை ஓட்டிவந்த மதன்குமாரின் இரண்டு கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். டிராக்டரில் அளவுக்கு அதிகமான உயரத்தில் சோளத் தட்டைகளை ஏற்றி வந்ததால் மின் கம்பி மீது உரசி விபத்து ஏற்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...