கோவை: நாட்டுக்கோழி வளர்ப்பு நிறுவனம் நடத்தி 17.68 லட்சம் ரூபாய் மோசடி செய்த கணவன், மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த பெத்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்லமணி (42). அவரது கணவர் ராமலிங்கம் (47). இருவரும் இணைந்து கே.பி.ஆர்.எஸ் பவுல்டரி பார்ம்ஸ் என்ற பெயரில் நாட்டுக்கோழி வளர்ப்பு நிறுவனத்தை 2016-ம் ஆண்டு தொடங்கினர்.
இந்த நிறுவனத்தில், 1.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஷெட் அமைத்து, 200 நாட்டு கோழிக்குஞ்சுகளை அளிப்பதுடன் மாதம் தோறும் 6,000 ரூபாய் வீதம் 36 மாதங்களுக்கு பராமரிப்பு செலவு அளிக்கப்படும் எனவும் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் கவர்ச்சிகரமாக திட்டங்களை அறிவித்து விளம்பரம் செய்தனர்.
இதனை நம்பி 9 பேர் மொத்தம் சுமார் 17.68 லட்சம் ரூபாய் அளவுக்கு முதலீடு செய்தனர். ஆனால், அறிவித்தபடி பராமரிப்பு செலவு, ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை வழங்கவில்லை. இதையடுத்து, சங்ககிரியை அடுத்த அம்மாபாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்லமணி, ராமலிங்கம் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட கணவன்,மனைவி இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 10.18 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, அதில் 10 லட்சம் ரூபாயை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும், என நீதிபதி ஏ.எஸ்.ரவி உத்தரவிட்டார்.