கோவை: கோவை விமான நிலையத்தில் தங்கத்தை பொடியாக்கி அதை கேப்சூல்களாக மாற்றி விழுங்கி, நூதன முறையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சார்ஜாவில் இருந்து வந்த 5 பயணிகளை போலீசார் மடக்கி பிடித்தனர்.
கோவை: கோவை விமான நிலையத்தில் தங்கத்தை பொடியாக்கி அதை கேப்சூல்களாக மாற்றி விழுங்கி, நூதன முறையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சார்ஜாவில் இருந்து வந்த 5 பயணிகளை போலீசார் மடக்கி பிடித்தனர்.
சினிமாவை மிஞ்சும் இந்த பரபரப்பு சம்பவத்தில், கடத்திவரபட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 2.85 கோடி மதிப்பு, என்று தெரியவந்துள்ளது.
முதல் முறையாக கேப்சூல் வடிவில் விழுங்கி தங்கம் கடத்தி வரப்பட்டது, என அதிகாரிகள் தகவல்.
சிக்கிய கடத்தல்காரர்கள்
கடந்த 1 ஆம் தேதி ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் கோவை விமானம் நிலையம் வந்த 5 பயணிகளை, விமான நிலையத்தில் பணியிலிருந்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், அவர்கள் 5 பேரும் மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்ட 6318 கிராம் எடைக்கொண்ட பேஸ்ட் வடிவிலான தங்கம் இருந்தது தெரியவந்தது.
ரூ.2.85 கோடி மதிப்பிலான 24 கேரட் 5747 கிராம் தங்கம் குடலிலிருந்து எடுக்கப்பட்டது.
விசாரணையில், 324 கிராம் எடைக்கொண்ட தங்கம் அடங்கிய 28 கேப்சூல்கள் விழுங்கி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மலக்குடலிலும், விழுங்கப்பட்ட கேப்சூல்கள் என மொத்தமாக 6642.4 கிராம் தங்கத்தை பல்வேறு வழிகளில் பிரித்தெடுத்ததில் ரூ.2.85 கோடி மதிப்பிலான 24கேரட் 5747 கிராம் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை விமான நிலையத்தில் பிடிபட்ட சிவகங்கை, திருச்சி, சென்னை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 5 பயணிகளையும் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், மலக்குடலில், பைகளில், மின்சார சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களில் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக கேப்சூல் வடிவில் விழுங்கி தங்கம் கடத்தி வரப்பட்டது, இதுவே முதல் முறை, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.