கோவை: குன்னூரில், தவறவிட்ட செல்போனை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த போலீசாரை இன்ஸ்பெக்டர் பாராட்டினார்.
கோவை: குன்னூரில், தவறவிட்ட செல்போனை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த போலீசாரை இன்ஸ்பெக்டர் பாராட்டினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் நந்தகுமார் என்ற இளைஞர் தன்னுடைய செல்போனை தவறவிட்டுவிட்டார். இதைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் குற்றப்பிரிவு போலீசாரிடம் அவர் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் ஜார்ஜ், அஜீஸ், ரெஜி குமார், ரமேஷ், ஆனந்த், பாஷா ஆகியோர் ஒரு மணி நேரத்தில் செல்போனைக் கண்டறிந்து உரியவரிடம் ஒப்படைத்தனர். இதற்கு குன்னூர் ஆய்வாளர் மணிவண்ணன் பாராட்டு தெரிவித்தார்.