நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் பெரிய பிக்கட்டி பகுதியில் காட்டெருமை தாக்கியதில் லட்சுமி என்ற மூதாட்டி பலியானார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த பெரிய பிக்கட்டி பகுதியில் வசிப்பவர் லட்சுமி (வயது 65). தேயிலைத் தோட்ட தொழிலாளியான இவர் வீட்டை விட்டு வெளியே சென்றபோது செடிகளுக்குள் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று அவரைத் தாக்கி தூக்கி வீசியது. இதில் லட்சுமியின் முதுகு,நெஞ்சு மற்றும் கை, கால்களில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமி உயிரிழந்தார்.
தகவல் அறிந்த குன்னூர் வனச்சரக அலுவலர் சசிகுமார் மற்றும் வனவர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று மூதாட்டியின் உடலைக் கைப்பற்றினர், அருவங்காடு காவல்துறையினர் உடல்கூறு ஆய்வுக்காக குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.