கோவையில் ரூ.6000 லஞ்சம் பெற்ற நில அளவையாளர், ஓய்வு பெற்ற ஊழியர் மற்றும் முகவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது!

கோவை: கோவையில் 6000 ரூபாய் லஞ்சம் பெற்ற நில அளவையாளர், ஓய்வு பெற்ற ஊழியர் மற்றும் இவர்களுக்கு உதவிய முகவர் உள்ளிட்ட மூன்று பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் 6000 ரூபாய் லஞ்சம் பெற்ற நில அளவையாளர், ஓய்வு பெற்ற ஊழியர் மற்றும் இவர்களுக்கு உதவிய முகவர் உள்ளிட்ட மூன்று பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஊழியர் நாகராஜன்(62). இவரது மனைவி சுமதி. நாகராஜன் தனது மனைவியின் பெயரில் அதே பகுதியில் மூன்று மனைகளை வாங்கியுள்ளார்.

இந்நிலையில், பத்திரப்பதிவுக்காக சிங்காநல்லூர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பம் செய்திருந்த நாகராஜன், இந்த அலுவலகத்தில் நில அளவையாளராக பணிபுரியும் நிர்மல்குமாரை அணுகியுள்ளார்.

இதனிடையே, இரண்டு மாதங்களாகியும் பட்டா பெயர் மாற்ற பரிந்துரை செய்யாமல் நிர்மல்குமார் இழுத்தடித்த நிலையில் நேற்று மாலை நாகராஜன், மாநகராட்சி அலுவலகத்துக்கு நிர்மல்குமாரை காண வந்த போது அவர் அங்கு இல்லாததால் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். நிர்மல்குமார் செல்போனில் பேசிய போது அந்த அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நடராஜன் என்பவரிடம் பெற்று கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இந்த நிலையில், பட்டா மாற்ற பரிந்துரைக்கு 2000 வீதம் 6000 ரூ கொடுக்க சொல்லி அளவையாளர் கூறியதாக நடராஜன் தெரிவித்துள்ளார். தன்னிடம் தற்போது பணமில்லை என்று கூறிய நாகராஜன், பட்டா பெயர்மாற்றத்துக்கான ஆவணங்களை கொடுத்து விட்டு, காலையில் வந்து பணம் தருவதாக கூறி பட்டா மாற்ற பரிந்துரையைப் பெற்று சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, நாகராஜன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். மறுநாள் கிழக்கு மண்டல மாநகராட்சி அலுவலகம் சென்ற நாகராஜன், நிர்மல்குமாரிடம் பணம் கொடுக்க முயன்றபோது அதனை நடராஜனிடம் கொடுக்கும் படி கூறியுள்ளார். பணத்தை நடராஜன், பிரதீப்குமார் என்பவரிடம் தருமாறு கூறியுள்ளார். ரசாயனம் தடவிய பணத்தை பிரதீப்குமார் என்ற ஏஜெண்ட்டிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் கணேஷ், ஆய்வாளர் கலையரசி, ஆறுமுகம் ஆகியோர் கையும் களவுமாக பிடித்தனர்.

விசாரணையில் பிரதீப் குமாரை நில அளவையாளர் நிர்மல்குமார் தனது சொந்த தேவைகளுக்காக ஏஜெண்ட் ஆக பலவருடங்களாக பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து பிரதீப்குமார் அளித்த வாக்குமுலத்தின் அடிப்படையில் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...