பீளமேடு பகுதியில் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்!

கோவை: பீளமேடு பகுதியில் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.



கோவை: பீளமேடு பகுதியில் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளைஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சிங்கநல்லூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு, 26 ஆண்டுகளுக்கு ரூ. 3 ஆயிரத்து 150 கோடிக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்துக்கு இந்த மக்கள் விரோத அரசு ஒப்பந்தம் வழங்கியிருக்கிறது. குடிமக்களுக்கு அரசு செய்து தர வேண்டிய அடிப்படை தேவைகளில் ஒன்று குடிநீர். அந்தக் குடிநீரை விநியோகிக்கும் வேலையைக்கூட செய்யமுடியாத கையாலாகாத அரசாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தமிழக உள்ளாட்சித் துறையும், முதல்வர் பழனிசாமி அரசும் மாறியிருக்கிறது.

ஆகவே, கோவை மாநகராட்சி சூயஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், 998 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்தும், பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தியும், பாதாள சாக்கடை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில், பீளமேடு ரொட்டிக் கடை மைதானம் பகுதியில், கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் பீளமேடு பகுதி – 1 தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது'' இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...