திருப்பூர்: விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் எனும் தலைப்பில் திமுகவின் மகளிர் அணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடந்த 2 தினங்களாக திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, இன்று திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அவிநாசி மற்றும் பல்லடம் சட்டமன்ற தொகுதிகளில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ரேஷன் கடைகளில் தரமில்லாத மோசமான பொருட்களை வழங்குவதாக பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். நியாய விலைக்கடைகள் நியாய விலைக்கடைகளாக செயல்படுவதில்லை. மருத்துவக் கல்லூரிகள் ஆட்சியில் இருப்பவர்களால் தான் முன்னெடுப்பு எடுக்கப்பட்டு கொண்டு வர முடியும்., எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு வருடம் ஆகியும் பணி துவங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.
மேலும், தமிழக நலன் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து திமுக குரல் எழுப்பி வருகிறது. 10 வருட காலமாக திமுக ஆட்சியில் இல்லாததால் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருவதாக கூறிய அவர், 10 வருட காலமாக ஆட்சியில் இருந்து தற்போது குறைதீர்க்கும் மையம், இலவச தொலைபேசி எண் அறிவிக்க காரணம் என்ன 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் கருணாநிதி அவர்களின் ஆட்சிக் காலத்திலிருந்து தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், அவர்களை விடுதலை செய்யக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக அரசு பொய்யான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது. பிரதமர் நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்காக பேசுவது போல அல்லாமல் அவர்களின் கோரிக்கையான 3 சட்டதிருத்த மசோதாவினை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.