கோவை: இரும்பு, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகளை தீர்வு காண வலியுறுத்தி 8 கட்டுமான நிறுவன அமைப்புகள் சார்பில் 12-02-2021 அன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை கோவை மத்திய சங்கங்களின் கூட்டுகுழு ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.
கோவை: இரும்பு, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வுக்குமத்திய மாநில அரசுகளை தீர்வு காண வலியுறுத்தி 8 கட்டுமான நிறுவன அமைப்புகள் சார்பில் 12-02-2021 அன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை கோவை மத்திய சங்கங்களின் கூட்டுகுழு ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.
மத்திய மாநில அரசுகளின் கார்பரேட்டு ஆதரவு கொள்கைகளால் கட்டுமான துறையின் அடிப்படை பொருட்களான இரும்பு, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனால் கட்டுமான தொழில், இத்தொழிலை நம்பி பிழைக்கும் தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
மத்திய அரசு முன்பே நடைமுறை படுத்திருக்கும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜீஎஸ்டி வரி கட்டமைப்பு, கொரோனா கால மறுசீரமைப்பு பணிகள் செய்யாதது உள்ளிட்ட காரணங்களால் கட்டுமான துறை சிக்கி சீர் அழிந்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது இரும்பு டன் ஒன்றுக்கு 35 ஆயிரத்திலிருந்து 65 ஆயிரமாக உயர்வு, சிமெண்ட் மூட்டை ஒன்றுக்கு 280 ரூபாயிலிருந்து 420 ரூபாயாக உயர்வு இதர பொருட்கள் 20% வரை உயர்ந்துள்ளது.
மேலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், நிறுவன ஊழியர்கள், கட்டுமான தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் வேலையின்றி வருமானம் இன்றி துயரத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே, மத்திய மாநில அரசுகளை தீர்வு காண வலியுறுத்தி 8 கட்டுமான நிறுவன அமைப்புகள் சார்பில் 12-02-2021 அன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை கோவை மத்திய சங்கங்களின் கூட்டுகுழு ஆதரிக்கிறது. மேலும் மத்திய தொழிற்சங்களின் போராட்டங்கள் விரைவில் நடைபெறும் என்பதை தெரிவிக்கப்பட்டுள்ளது.