கோவை: தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை. உடனடியாக கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்துவதாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலரிடம் மாணவர்கள் புகார் செய்தனர்.

கொரோனா காரணமாக கல்வி உதவித்தொகை சார்ந்த அரசு அறிவிப்பு தாமதம் ஏற்படுவதால், தனியார், சுயநிதிக் கல்லுாரிகள் எஸ்.டி., எஸ்.சி. மாணவர்களை கட்டணம் கட்ட கட்டாயப்படுத்துவதாக நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
அரசாணை எண். 92-ன் படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்விக்கட்டணம் முழுவதும், நேரடியாக கல்லூரிகளுக்கு அரசே செலுத்தி விடும். நடப்பாண்டில் இதுகுறித்த அறிவிப்புகள், அறிவுறுத்தல்கள் ஏதும் வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில், கட்டணம் செலுத்தும் மாணவர்களை மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்க முடியும் என சில கல்லூரிகள் மாணவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்குவதாக, வருவாய்த்துறை அலுவலர் ராமதுரை முருகனிடம் புகார் செய்தனர்.
இதுகுறித்து எஸ்.சி., எஸ்.டி. நலச்சங்க நிர்வாகி செல்வகுமார் கூறும்போது, `எஸ்சி.,எஸ்.டி., மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் அரசே ஏற்கும். நடப்பாண்டில் பல்வேறு காரணங்களால் அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசாணை குறித்து, மாவட்ட நிர்வாகம் உரிய அறிவுறுத்தல்களை கல்லூரிகளுக்கு வழங்க வேண்டும்' என்றார்.