சூலூர் அருகே திமுக நிர்வாகி அடித்துக்கொலை; உணவக உரிமையாளர், புரோட்டா மாஸ்டர் கைது

கோவை: கோவை சூலூர் அருகே, உணவகத்தில் ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்ட திமுக நிர்வாகி குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் உரிமையாளர் மற்றும் புரோட்டா மாஸ்டரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை சூலூர் அருகே, உணவகத்தில் ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்ட திமுக நிர்வாகி குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் உரிமையாளர் மற்றும் புரோட்டா மாஸ்டரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை சூலூர், அருகே உள்ள முத்து கவுண்டன் புதூர்். இங்குள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 37), பெயிண்டர், இவருக்கு மனைவி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தப் பகுதியில் திமுக கிளை தலைவராகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று வேலை முடிந்து வந்த வீட்டிற்க்கு வந்த ஆரோக்கியராஜ் அருகில் உள்ள கரிகாலன் என்பவரது ஓட்டலுக்கு சென்று புரோட்டா வாங்கியுள்ளார். அப்போது குருமா குறைந்த அளவிலேயே கட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது. சாப்பிடுவதற்கு இது போதாது இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று ஆரோக்கியராஜ் கேட்கவே, நீங்கள் கொடுத்த பணத்துக்கு தகுந்தவாறு கொடுத்துள்ளேன், இதற்கு மேல் கொடுக்க முடியாது என கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில், வாக்குவாதம் முற்றி கைகலப்பாக, அப்போது அங்கிருந்த புரோட்டா மாஸ்டர் கருப்பசாமி, ஓட்டல் உரிமையாளரின் நண்பர் முத்து ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஆரோக்கியராஜை அடித்து உதைத்துள்ளனர்.

தகராறில், ஆரோக்கியராஜ் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சூலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். திமுக பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுகவினர் நள்ளிரவு அங்கு திரண்டு கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுகுறித்து சூலூர் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தார். இந்த நிலையில் ஓட்டல் உரிமையாளர் கரிகாலன் மற்றும் மாஸ்டர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும், கொலையில் தொடர்புடைய கரிகாலனின், நண்பர் முத்து என்பவரை தேடி வருகிறார்கள்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...