தி.மு.க.வை எதிர்த்துதான் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க. தொடங்கினார்: அமைச்சர் வேலுமணி சொல்கிறார்!

கோவை: தி.மு.க.வையும் கலைஞரையும் எதிர்த்துதான் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வைத் தொடங்கினார். அதனால் தி.மு.க.தான் என்றும் பொது எதிரி என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.



கோவை: தி.மு.க.வையும் கலைஞரையும் எதிர்த்துதான் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வைத் தொடங்கினார். அதனால் தி.மு.க.தான் என்றும் பொது எதிரி என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.



கோவை பேரூர் செட்டிபாளையம் பகுதியில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் நடத்தி வைக்கப்படவுள்ள இலவசத் திருமணங்கள் நடக்கவிருக்கும் இடத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்.

இதையடுத்து அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு 73 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதாக இருந்தது. அது 123 ஜோடிகளாக அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டு திருமணம் தள்ளிப்போனவர்களுக்கும் இலவசமாக திருமணம் செய்து வைப்பதால் எண்ணிக்கை இந்த வருடம் அதிகரித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுத்தும் திட்டங்களுக்கு, தான் கூறித்தான் முதலமைச்சர் திட்டங்களை செயல்படுத்துவதாக மு.க.ஸ்டாலின் கூறிவருவது அரசியல் நாகரிகமற்ற செயலாகும்.

கட்சியைச் சேர்ந்த அனைவரும் அண்ணன் - தம்பி போல் செயல்பட‌ வேண்டும் என்று நான்‌ கூறியதை அனைவரும் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டனர். வேட்பாளர் ஆகும் தகுதி பலருக்கு இருப்பினும் வாய்ப்பு ஒருவருக்கே வழங்க முடியும். மற்றவர்கள் ஒருங்கிணைந்து அந்த வேட்பாளரை வெற்றி பெறவைக்க பாடுபட வேண்டும் என்னும் அர்த்தத்தில்தான் நான் அப்படிக் கூறினேன்.

தி.மு.க.தான் பொது எதிரி என்று தினகரன் கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி நடக்கும்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களை கூர்க்கில் தங்கவைத்து மு.க. ஸ்டாலினை குறுக்குவழியில் முதலமைச்சராக்க பாடுபட்டபோது தி.மு.க. பொது எதிரி என்று தெரியவில்லையா?

தி.மு.க.வையும் கலைஞரையும் எதிர்த்துதான் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வைத் தொடங்கினார். அதனால் தி.மு.க.தான் என்றும் பொது எதிரி. கருணாநிதி நினைத்திருந்தால் ஈழப்படுகொலையை தடுத்திருக்க முடியும். ஆனால் கருணாநிதி தமிழினத்துக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகத்தை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்.

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணாமல், தற்போது ஸ்டாலின் மக்களிடமிருந்து மனுக்கள் பெறுவதாக கண்துடைப்பு வேலை செய்து வருகிறார். முதலமைச்சரின் மக்கள் செல்வாக்கைக் கண்டு மு.க.ஸ்டாலின் பயத்தில் இவ்வாறு நடந்து கொள்கிறார். அ.தி.மு.க.வில் யாராலும் பிளவை ஏற்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...