கோவை: ஈமு கோழிப்பண்ணை நடத்தி பல கோடி மோசடி செய்து ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானவரை பிடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கவுண்டன் வலசுவை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் ஈமு கோழிப்பண்ணை நடத்தி மோசடி செய்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, கோவிந்தசாமி ஜாமீன் கிடைக்கப் பெற்று விடுவிக்கப்பட்டார். ஆனால், அவர் வாய்தாவுக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த நிலையில், நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. கோர்ட்டு தலைமை எழுத்தர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தசாமியை தேடி வருகின்றனர்.