வால்பாறை பகுதியில் குறைவான பஸ் இயக்கத்தால் மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான பயணம்: கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பேருந்துகள் மிகவும் குறைவாக இயக்கப்படுவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். இதுபோன்ற ஆபத்தான பயணத்தைத் தடுக்க உடனடியாக பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறைபகுதியில் பேருந்துகள் மிகவும் குறைவாக இயக்கப்படுவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். இதுபோன்ற ஆபத்தான பயணத்தைத் தடுக்க உடனடியாக பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறையில், குறைவான பஸ்கள் இயக்கப்படுவதால் அரசு பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் கோவை, பொள்ளாச்சி, பழநி, திருப்பூர் மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு 44 அரசு பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் நலன் கருதி மீண்டும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான வழித்தடங்களில் மிகக் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுவதால் மாணவர்கள் கூட்ட நெரிசலில் பயணம் செய்ய முடியாத நிலையில், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறையில் எஸ்டேட் பகுதிகளுக்கு, குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால் மாணவர்கள் பயணம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். மலைப்பாதையில் வளைந்து நெளிந்து செல்லும் ரோட்டில், மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்வதால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வால்பாறை நகரிலிருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு வழக்கம்போல் அனைத்து வழித்தடங்களிலும் பஸ்களை இயக்க வேண்டும்,' என்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...