முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது!

கோவை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சென்னை இல்லத்திற்கும் சேலத்தில் உள்ள வீட்டிற்கும் செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சேலத்தில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர். அதேபோல, சென்னையிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இதுதொடர்பாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருப்பூர் மாவட்டம் கரடிவாவி பகுதியைச் சேர்ந்த நபரை பிடித்து போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், அவருடன் இருந்த மற்றொரு நபர் அங்கிருந்து தப்பி கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து திருப்பூர் மாவட்ட போலீசாரும் கருமத்தம்பட்டி போலீசாரும் இணைந்து செல்போன் சிக்னல் மூலம் தலைமறைவாக உள்ள நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...