கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை - வாலிபர் கைது!

கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த வாலிபரை போலீசார் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த வாலிபரை போலீசார் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா போதைப் பொருட்களை தடை செய்யும் விதமாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில் செல்வபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையில் போலீசார் நேற்று மதியம் சொக்கம்புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்ராஜ் என்கிற செல்போன் செந்தில் (37) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...