கோவை தடாகம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் செங்கல் சூளைகளை மூட நீதிமன்றம் பரிந்துரை..! சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி

கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள தடாகம் பகுதியில் யானைகள் வழிதடம் மற்றும் சட்டவிரோதமாக இயங்கி வரும் செங்கல் சூளைகளை மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள தடாகம் பகுதியில் யானைகள் வழிதடம் மற்றும் சட்டவிரோதமாக இயங்கி வரும் செங்கல் சூளைகளை மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை துடியலூர் அருகே உள்ள சின்னதடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளில் 180க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்குகின்றன.

இவை தமிழக அரசின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுவதாக, சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக புகார் தெரிவித்து வருகின்றனர். செங்கல் சூளைகள் காரணமாக அப்பகுதி முழுவதும் மாசு அடைந்துள்ளதாகவும், அதிக அளவு கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

மேலும், யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்தும் செங்கல் சூளைகள் இயங்குவதாக குற்றம்சாட்டு உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் கனேஷ் கூறுகையில், ‘‘கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நான்கு அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக ஆய்வறிக்கை கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்பிக்கப்பட்டது."

அதில், 183 செங்கல் சூளைகள் சட்டத்திற்கு புறம்பாக விதிகளை மீறி இயங்குகிறது. சுற்றுசூழல் பாதிப்பு, சுவாச பிரச்சனை, அதிக அளவு கனிம வளங்கள் சுரண்டி எடுப்பு என அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு 183 செங்கல் சூளைகளையும் மூட பரிந்துரை செய்துள்ளனர். இதனிடையே, தற்போது சமூக ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறபித்துள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது, என்றார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...