கோவையில் இந்திய வேளாண் பொருளாதார சங்கத்தின் 80-வது ஆண்டு ஆராய்ச்சி மாநாடு தொடக்கம்!

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு ஆய்வு மையம் மற்றும் இந்திய வேளாண் பொருளாதார சங்கத்தின் 80-வது ஆண்டு ஆராய்ச்சி மாநாடு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது.



கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு ஆய்வு மையம் மற்றும் இந்திய வேளாண் பொருளாதார சங்கத்தின் 80-வது ஆண்டு ஆராய்ச்சி மாநாடு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது.

இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.குமார் தலைமை வகித்தார். வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு ஆய்வு மைய இயக்குநர் கே.ஆர்.அசோக் வரவேற்றார். நபார்டு வங்கி தலைவர் ஜி.ஆர்.சின்தாலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

வேளாண் மேம்பாட்டு நிறுவனங்கள், சந்தை வழி மேலாண்மை, உழவர் உற்பத்தி நிறுவனங்கள், வேளாண் தொழிலாளர் திறன் மேம்பாடு, தொழிலாளர் உற்பத்தித் திறன் மற்றும் வேலைவாய்ப்பு, மலைத் தோட்ட பயிர்களின் வேளாண் வணிகம் மற்றும் சர்வதேச வணிக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் சொற்பொழிவுகள் நடைபெற்றன.

இதில் பொருளாதார அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.

அதைத்தொடர்ந்து நபார்டு வங்கித் தலைவர் ஜி.ஆர்.சின்தாலா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொரோனா பெருந்தொற்று காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகளும் இதே பிரச்சினையைத் தான் சந்தித்துள்ளன. இருந்த போதிலும், இந்தியாவில் விவசாயம் பாதிக்கப்படவில்லை என்றார்.



உற்பத்தி மற்றும் விநியோகம் சிறப்பாக இருந்தது. சொல்லப்போனால் உற்பத்தி 4 சதவீதம் அதிகரித்துள்ளது. விவசாயத்திற்கு உள்கட்டமைப்பு, கடன் வசதி, உற்பத்தி அவசியம். இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு 2020-21-ம் ஆண்டில் ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து, இதில் ரூ.12 லட்சம் கோடியை வழங்கி விட்டது. 2021-22-ம் ஆண்டில் ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 86 சதவீதம் சிறு, குறு விவசாயிகள் இருந்த போதிலும், விவசாயம் செய்வதற்கு அவர்களுக்கு போதுமான அளவு பொருளாதார வசதி இருக்காது. இதற்காக 4,600 உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.



மேலும், அடுத்த 4 ஆண்டுகளில் இந்நிறுவனங்களின் எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் வட்டி, உற்பத்தி செலவு இதன்மூலம் குறையும். வறுமையில் இருந்து விவசாயிகள் விடுபட முடியும். கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறும் கடனை விவசாயிகள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு நபார்டு கைகொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...