கோவை: தேசிய பன்முகத் தன்மையை சீர்குலைப்போர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முக்கனி மனிதநேய அறக்கட்டளை சார்பாக கோவை கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாகவே ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மாற்று மதத்தவர் பற்றியும் மதங்களைப் பற்றியும் இழிவாகப் பேசி மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டி வரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

`வேற்றுமையில் ஒற்றுமை' என்று பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி வாழ்ந்து வரும் நிலையில் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள்மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முக்கனி மனிதநேய அறக்கட்டளை சார்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், நாட்டு மக்களின் ஒற்றுமையை காக்கவும், இந்திய தேசியத்தின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவோர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.