கோவை: மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் மோட்டார் பம்ப்செட் தொழில்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதால் விலையைக் கட்டுப்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு கோவை தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில், 3,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு மோட்டார் பம்ப்செட் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்களை நம்பி, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்டர் எடுத்து தொழில் நடத்தி வருகின்றனர். தொழிற்சாலை, வீடு, விவசாயம் என பல்வேறு தேவைகளுக்கு மோட்டார் பம்ப்செட்கள் இங்கிருந்து உற்பத்தியாகின்றன. தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களுக்கு கோவையில் இருந்துதான் மோட்டார் பம்ப் செட்கள் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
சமீபகாலமாக, மூலப்பொருட்களின் தொடர் விலையேற்றம், ஆட்கள் பற்றாக்குறை போன்றவை இதன் உற்பத்தியை பாதியாகக் குறைந்துவிட்டது. மோட்டார் பம்ப் செட் தொழிலுக்கு முக்கிய மூலதனமான 'காப்பர் ஸ்டீல் ராடு, காந்த அலை தகடுகள் எனும் ஸ்டாம்பிங், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றின் விலை, தற்போது, 20 சதவீதம் கூடியுள்ளதால், தொழில் நடத்த முடியாமல் சிறு, குறு பம்ப்செட் உற்பத்தியாளர்கள் திணறுகின்றனர்.
தற்போது நல்ல மார்க்கெட் இருந்தும் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தாலும் ஆட்கள் பற்றாக்குறையாலும் தினந்தோறும் 30 சதவீத அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்படுவதாக சிறு மற்றும் குறு தொழில்முனைவோர் கூறுகின்றனர்.மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து மூலப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.