கோவை அருகே பாக்கு தயாரிப்பு நிறுவனத்தில் குட்கா: வருமான வரித்துறையினர் சோதனையில் சிக்கியது!

கோவை: கோவை அருகே பாக்கு தயாரிப்பு நிறுவனத்தில் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின்போது சிக்கியது.


கோவை: கோவை அருகே பாக்கு தயாரிப்பு நிறுவனத்தில் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின்போது சிக்கியது.

கோவாவை தலைமையிடமாக கொண்ட 'கோவா கேஷ்யூ' மற்றும் 'யூனிகாட் புட் ப்ராடக்ட்ஸ்' எனும் நிறுவனம் கோவை அருகே அன்னுார் அச்சம்பாளையத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு பாக்கு தயாரிக்கப்படுகிறது. இந்நிறுவனத்தில் நேற்றுமுன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் என எட்டு பேர் கொண்ட குழு சோதனை நடத்தியது.

நிறுவன வளாகத்தில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் தொழிற்சாலையில் சோதனை நடத்தினர். இதுகுறித்து வருமான வரித்துறையினர் கூறுகையில், இந்நிறுவனத்துக்குச் சொந்தமான மூன்று இடங்களில் சோதனை நடக்கிறது. இதில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள் கிடைத்துள்ளன' என்றனர்.

வருமான வரித்துறையினர் சோதனையை அடுத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வருமான வரித்துறை சோதனையால் நேற்று தொழிற்சாலை இயங்கவில்லை. தடை செய்யப்பட்ட குட்கா கிடைத்தது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...