கோவை: சுசி ஈமு என்ற பெயரில் பல கோடி மோசடி செய்த நிறுவனத்தின் சொத்துக்களை உடனடியாக ஏலம் விட்டு அதன் தொகையை முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுக்க டான்பிட் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த குருசாமி, 'சுசி ஈமு பார்ம்' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். ஈமு கோழி வளர்ப்பதற்கு வாடிக்கையாளர்களிடம், 200 கோடி ரூபாய் டெபாசிட் பெற்று பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக குருசாமியும், அவரது மனைவியும், 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது, கோவை, 'டான்பிட்' கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்களை ஏலமிடக்கோரி, அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பெருந்துறையில் உள்ள, சுசி ஈமு நிறுவன சொத்துக்களை ஏலமிட நீதிபதி ரவி உத்தரவிட்டார். அத்துடன் ஏலம் விட்ட தொகையை முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கவும் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.