பொள்ளாசி, உடுமலை கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடுகள்!

கோவை: கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள், வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள், வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோயில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஜோதிலிங்கேஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரருக்கு பூஜைகள் நடைபெற்றன. ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயிலில் ராமலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் ராமலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.

மாகாளியம்மன் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ருத்ரலிங்கேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ருத்ரலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார். டி.கோட்டாம்பட்டி வரதராஜப்பெருமாள் கோயிலில் நடந்த வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் யோக நரசிம்மர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுப்ரமணிய சுவாமி கோயில் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

உடுமலை தில்லை நகர் ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு, 16 வகையான பொருட்களில் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், ரத்தினலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார். பிரசன்ன விநாயகர் கோயிலில், விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் விஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வரர், சோமவாரப்பட்டி அமரபுயங்கீஸ்வரர் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, நேற்று தை மாத இரண்டாவது பிரதோஷபூஜை நடந்தது. மாலை 5.30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், தேன், திருநீறு உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பூஜை நடந்தது. மாலை 6.10 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜை நடந்தது. அதன்பின் ரிஷப வாகனத்தில் காசிவிஸ்வநாதர் தேவியருடன் எழுந்தருளி கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...