தன்னை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு லாபம் ஈட்டித் தர முடியவில்லையே... மனமுடைந்த பொள்ளாச்சி பங்குச் சந்தை புரோக்கர் விஷம் குடித்து சாவு!

பொள்ளாச்சி: பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு லாபம் ஈட்டித் தர முடியாததால் மனமுடைந்த பங்குச் சந்தை புரோக்கர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


பொள்ளாச்சி: பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு லாபம் ஈட்டித் தர முடியாததால் மனமுடைந்த பங்குச் சந்தை புரோக்கர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் அசோக்குமார் (வயது 32). இவர் கேப்பிட்டல் மார்க்கெட் இந்தியா லிமிடெட் ஏஜென்சி நிறுவனத்தில் பங்கு வர்த்தக புரோக்கராக பணிசெய்து வந்தார். இவரது அலுவலகம் பொள்ளாச்சி ராஜாமில் சாலையில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 10 மாதங்களாக பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டது. இதனால் இவரை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு சரியான லாபம் ஈட்டித் தர முடியவில்லை. இதில் விரக்தியடைந்த அசோக்குமார் நேற்று தனது அலுவலகத்தில் தென்னை மர மாத்திரையை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு விரைந்த மேற்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். அதில், தன்னை நம்பி பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு லாபம் ஈட்டித் தர முடியவில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன், எனது சாவுக்கு என் குடும்பத்தாரோ மற்றவர்கள் யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தை கைப்பற்றிய போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...