கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள கணபதி நகரைச் சேர்ந்தவர் அணில் குமார் (வயது 58). இவர் கக்கன் நகரில் சொந்தமாக மரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று மாலை கடையிலிருந்து அனில்குமார் சவுக்கு மரக் கட்டைகளை விற்பனை செய்வதற்காக அடுக்கி வைத்து கொண்டு இருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அடுக்கி வைத்திருந்த மரக்கட்டைகள் ஒன்றன் பின் ஒன்றாக சரிந்து விழுந்தது. இதில், சிக்கிக்கொண்ட அனில்குமார் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய நிலையில், அவரை அங்கு வேலை செய்த ஊழியர்கள் கட்டைகளுக்குள் இருந்து மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அனில் குமாரை, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் 176 வது சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.